
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது புதிய ஃபேமிலி ஸ்கூட்டரான EL01-ஐ ஆகஸ்ட் 29 அன்று அறிமுகம் செய்ய உள்ளது, இதன் விலை ₹1 லட்சம் முதல் ₹1.25 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஸ்கூட்டர் ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்ட ஹெட்லைட், LED டே டைம் ரன்னிங் லைட், 14 இன்ச் முன்பக்க வீல் மற்றும் 12 இன்ச் பின்பக்க வீல் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
மெட்டல் பாடி பேனல்களுடன் உருவாகியுள்ள EL01, ஏத்தர் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்கூட்டராக இருக்கும் என்றும், 2kWh முதல் 5kWh வரையிலான பேட்டரி பேக்குகள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.