
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க வீரர் டெம்பா பவுமா சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களுடன் தத்தளித்தது.
டெம்பா பவுமா மற்றும் மார்கோ யான்சென் ஜோடி 132 ரன்கள் சேர்த்த நிலையில், யான்சென் 85 ரன்களில் ஆட்டமிழந்தார்.