
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் டெக்கத்லான் பிரிவில் 7,976 புள்ளிகள் பெற்று தேஜஸ்வின் சங்கர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் வரலாற்றில் டெக்கத்லான் பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையை 27 வயதான தேஜஸ்வின் சங்கர் பெற்றுள்ளார்.
முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட போதிலும், இரண்டு நாட்கள் நடைபெற்ற 10 தொடர் போட்டிகளில் பங்கேற்று, ஈட்டி எறிதலில் 53.12 மீட்டர் தூரம் எறிந்து அவர் பதக்கத்தை உறுதி செய்தார்.