
நானி நடிப்பில் ஆகஸ்ட் 21-ம் தேதி திரைக்கு வரவுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த சிறப்புப் பாடலுக்காக கீர்த்தி சுரேஷுக்கு ரூ.1.5 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் 'ரிவால்வர் ரீட்டா' படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.