
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள எஸ்.ஏ. டி20 தொடரின் 5-வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீரன் பொல்லார்டு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நீண்ட காலம் இருந்த 39 வயதான பொல்லார்டு, தற்போது இந்திய மதிப்பின்படி ரூ.80 லட்சத்துக்குப் போட்டியின்றி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவருடன் ஜேசன் ரோல்ஸ், பாப் டு பிளெஸிஸ், தயான் கலீம், பிளெஸ்ஸிங் முசரபானி மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.