
சென்னை வெள்ளத்தைத் தடுக்க அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் 600 பக்க அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் என பாமக உறுப்பினர் சவுமியா அன்புமணி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
2022-ல் அமைக்கப்பட்ட இக்குழு 2023 மார்ச் மாதம் அறிக்கை தாக்கல் செய்தும், 41 மாதங்களாக அது வெளியிடப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், முதல்வர் விஜய் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.