
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்ட மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகுப் போட்டிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் விழாவில் நடிகர் சூரி தனது தாயாரை மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தினார்.