
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.
நேற்று மாலை 5.56 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு அவசரமாக ஓட்டம் பிடித்தனர்.
மெக்சிகோ முதல் பெரு வரையிலான கிழக்கு பசிபிக் பெருங்கடல் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.