
அடுத்த 12 மாதங்களில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை வெல்வதை தனது இலக்காக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் நிர்ணயித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் கடைசியாக 2001-லும், இந்தியாவில் 2004-லும் டெஸ்ட் தொடர்களை வென்ற நிலையில், வரவிருக்கும் 20 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படத் திட்டமிட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்டு 13-ம் தேதி டார்வினில் தொடங்க உள்ள நிலையில், ஹேசில்வுட் மீண்டும் அணிக்குத் திரும்பும் நம்பிக்கையில் உள்ளார்.