
காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பா சாகுபடிக்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாக சரிந்துள்ளதுடன், அக்.15-க்குப் பிறகு டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பை நீட்டிக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.
முழுமையான கடன் தள்ளுபடி இல்லாத நிலையில் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி சாகுபடி செய்துள்ளதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.