
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றுக்கு இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபத்தான பரவலைத் தொடர்ந்து உலக சுகாதார அவசரநிலை பிரகடனத்தை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளதுடன் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் பயணத் தடையும் விதித்துள்ளன.
உகாண்டாவில் இருந்து நைஜீரியாவுக்கு பயணித்த பெண்ணுக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் காங்கோ, கென்யா, உகாண்டாவை அடுத்து 4-வது நாடாக நைஜீரியாவிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.