
தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
த.வெ.க. அரசு 75,000 ரூபாய் வரையிலான கடன்களை முழுமையாகவும், அதற்கு மேல் உள்ள கடன்களுக்கு 35,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தது விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை அனைத்து கட்சி பிரமுகர்களையும் இணைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாநில பொதுச்செயலர் மாசிலாமணி அறிவித்துள்ளார்.