
சென்னையில் ஒரே நாளில் நடந்த இரு கொலைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
அடையாறில் தவெக நிர்வாகி படுகொலை மற்றும் நொளம்பூரில் புலம்பெயர் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் சுமார் 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ள நிலையில், முதல்வர் விஜய் பொதுமக்களின் பாதுகாப்பை அலட்சியம் செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.