
எல்.ஐ.சி. நிறுவனத்தில் மத்திய அரசு தனது 6.5 சதவீத பங்குகளை ஆஃபர் ஃபார் சேல் (OFS) திட்டத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
ஒரு பங்கின் அடிப்படை விலை ரூ. 382 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விற்பனை மூலம் அரசுக்கு சுமார் ரூ. 31,400 கோடி முதல் ரூ. 35,000 கோடி வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த விற்பனை மூலம் எல்.ஐ.சி.யில் பொதுமக்களின் பங்கு 3.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும், இது செபி விதிகளுக்கு உட்பட்டது.