
தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள புதிய 1,600 மெகாவாட் நிலக்கரி மின் நிலையம் புதுப்பிக்கத்தக்க மின் ஆதாரங்களை விட விலை உயர்ந்ததாக இருக்கும் என கிளைமேட் ரிஸ்க் ஹொரைசன்ஸ் (CRH) ஆய்வு தெரிவித்துள்ளது.
நிலக்கரி அனல்மின் நிலையத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு ரூ.8.75 முதல் ரூ.10.40 வரை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக பேட்டரி சேமிப்புடன் கூடிய சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தினால் மாநிலத்திற்கு பெருமளவு நிதி மிச்சமாகும் எனவும் CRH பரிந்துரைத்துள்ளது.