
இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடித்துள்ள 'இம்மார்டல்' படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார்.
திகில் மற்றும் காதல் கலந்த கதையம்சம் கொண்ட இப்படம், செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2.55 நிமிட டிரெய்லரில் சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை மற்றும் இளையராஜாவின் 'பனி விழும் இரவு' பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.