
பழநி தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீனை ரத்து செய்ததால் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த சார்பதிவாளரை போலீஸார் கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்தனர்.
உடல்நலக்குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் நேரில் சந்தித்து ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.