
வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கக் கோரி படிவம்-7 விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு தேர்தல் கமிஷன் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி தனிநபர் அதிகபட்சம் 10 விண்ணப்பங்களையும், வழக்கமான திருத்தத்தின்போது மாதத்திற்கு 5 விண்ணப்பங்கள் மட்டுமே தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பொய்யான புகார்கள் அளிக்கப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 பிரிவு 31-ன் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.