
சுவிட்சர்லாந்தின் EPFL நிறுவனம், ஏரிகளில் பரவும் நீல-பச்சை பாசி நச்சுகளைத் துல்லியமாகக் கண்டறியும் 'Nanopore Sensor' தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சென்சார் Aerolysin Protein மூலம் செயல்பட்டு, 300-க்கும் மேற்பட்ட நச்சு வகைகளை அவற்றின் மின்சார தடம் மூலம் வேறுபடுத்திக் காட்டுகிறது.
ஆய்வக சோதனையில் 7 வகையான Microcystins நச்சுகளை அடையாளம் கண்டுள்ள இந்த சாதனம், WHO குடிநீர் வழிகாட்டுதலுக்கு 40 மடங்கு குறைவான செறிவிலும் செயல்படுகிறது.