
ஹைதி நாட்டின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே உள்ள கெண்ட்ஸ்கப் நகரில் ஆயுதக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
2021-ம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அந்நாட்டில் ஆயுத கும்பல்களின் ஆதிக்கம் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.