அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்யப் போவதாக மிரட்டியதாகக் கூறப்படும் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ரோனி யோர்ட்ரி குவானோப்ரினோஸ் என்பவர் வெள்ளை மாளிகைக்கு அருகே ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது காரில் ஒரு துப்பாக்கி, இரண்டு கைத்துப்பாக்கிகள், ஏராளமான தோட்டாக்கள் மற்றும் திருடப்பட்ட வாகனம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அவரை அடையாளம் கண்டுள்ளது.
ட்ரம்பைக் கொலை செய்யுமாறு தன்னிடம் சிலர் உத்தரவிட்டதாக அவர் அதிகாரிகளிடம் கூறியுள்ள நிலையில், ஆயுதங்கள் வைத்திருப்பது மற்றும் திருட்டு வாகனத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.