
திருமதி செல்வம், மெட்டி ஒலி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகர் வி.சி. ஜெயமணி மாரடைப்பு காரணமாக காலமானார்.
திருமதி செல்வம் தொடரில் பூங்காவனம் என்ற கதாபாத்திரம் மூலம் புகழ்பெற்ற இவர், 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை, கல்யாணப் பரிசு போன்ற தொடர்களிலும் நடித்திருந்த ஜெயமணி, இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.