
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் காதலித்த பிரவீன்குமார் என்ற இளைஞரை ஆணவக்கொலை செய்த வழக்கில், தவெக நிர்வாகி ஏழுமலை மற்றும் அவரது மகன் கௌதம் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் படைத்த பெண்ணைக் காதலித்ததற்காக 22 வயதான பிரவீன்குமார் கூலிப்படையினரால் நடுரோட்டில் வெட்டி சாய்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓஎம்ஆர் சாலையில் இரண்டு மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.