
தங்க நகைகளைப் போலவே வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்படுவதாக இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த விதியின்படி, 6 இலக்க அடையாள எண் மற்றும் தர விவரங்கள் கொண்ட வெள்ளி நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்.
தற்போது நாடு முழுவதும் 102 மாவட்டங்களில் 341 வெள்ளி பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், விதிகளை மீறும் வியாபாரிகள் மீது அபராதம் விதிக்கப்படும்.