
பிரிட்டனைச் சேர்ந்த 97 வயது மூதாட்டி பெட்டி ப்ரோமேஜ், மணிக்கு 150 மைல் வேகத்தில் பறந்த விமானத்தின் இறக்கையில் நின்றபடி வான் சாகசம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2025-ல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தனது 93-வது வயதில் செய்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
தனக்கு சிகிச்சை அளித்த செல்டன்ஹாம் பொது மருத்துவமனையின் பக்கவாதப் பிரிவுக்கு நிதியுதவி திரட்டுவதற்காக இந்த சாகசத்தை அவர் மேற்கொண்டார்.