
நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள மாணவர்களை விடுதலை செய்யக்கோரி பீகாரில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விரட்டியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்வதாக பீகார் அரசு அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றாததால், மாணவர்கள் மீண்டும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.