/nakkheeran/media/media_files/2026/10/09/vijayrahul-2026-10-09-19-52-24.jpg)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி நாளை (அக்.10) சென்னை தீவுத்திடலில் மாணவர்களுடன் கலந்துரையாடி உரையாற்ற உள்ளார்.
நாளை மதியம் 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேசுகிறார்.
பின்னர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.