
உக்ரைன் தலைநகர் கீவ், டினிப்ரோ மற்றும் கிரிவி ரிஹ் உள்ளிட்ட நகரங்களை நோக்கி ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவின் நோவோரோசிஸ்க் பகுதியில் இருந்து ஏவப்பட்ட குரூஸ் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்க உக்ரைன் வான்பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டன.
தாக்குதல் குறித்து அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்ததால், பொதுமக்கள் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சம் அடைந்தனர்.