
பெங்களூருவில் நடைபெற்ற ஜூனியர் நட்பு கால்பந்து போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது.
இந்திய வீரர் ரிஷி சிங் முதல் கோலை அடிக்க, இரண்டாவது பாதியில் சிங்கப்பூர் வீரர் ஒரு 'சேம்சைடு' கோல் அடித்தார்.
2027 ஆசிய கோப்பை தகுதிச்சுற்றுக்குத் தயாராகும் வகையில் இந்திய அணி இந்த நட்பு போட்டிகளில் பங்கேற்கிறது, இரண்டாவது போட்டி நாளை நடைபெறுகிறது.