
போட் நிறுவனம் 'ஆக்டிவ் பிளஸ்' என்ற புதிய ஸ்மார்ட்ரிங்கை அறிமுகம் செய்துள்ளதுடன், இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இணையதள விற்பனையில் ரூ. 2,220க்கு கிடைக்கும் இந்த மோதிரத்தில் இதய செயல்பாடு, மூச்சுத் திறன், ரத்த ஆக்சிஜன் மற்றும் உடல் வெப்பநிலை ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கிட நுண்ணிய சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
துரு மற்றும் கீறல்கள் ஏற்படாத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோதிரம் காந்த சார்ஜிங் திறன் மூலம் முழுமையாக 30 நாள்கள் வரை பேட்டரி நீடிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.