
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான ஓராண்டு கால கட்டடத்துக்கு கணக்கிடப்பட்டு, இதில் 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத் தொகை அடங்கும்.
இதன் அடிப்படையில் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,800 போனஸ் வழங்கப்படும் என்றும், இதற்கான நிதி மாவட்ட மேலாளர்களின் கணக்குகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.