
யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள புதிய படத்திற்கு ‘டெத் ரயில்வே’ என பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பான் இந்தியாவுக்குள் நுழைவதற்காக பர்மா - தாய்லாந்து இடையே ரயில் பாதை அமைத்த பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.