
நீலகிரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இல்லாததால் அப்புக்கோடு, பேரகணி, ஆத்துார் ஆகிய மூன்று அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த கல்வியாண்டில் 35,446 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் 32,437 ஆகக் குறைந்துள்ளதால் 56 பள்ளிகள் 10-க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்குகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தால் மாவட்டத்தில் மொத்தம் 29 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.