
சாம்சங் நிறுவனம் தனது முதன்மைத் தயாரிப்பான கேலக்ஸி எஸ்26 சீரிஸ் போன்களின் விலையை 17 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
மெமரி சிப்கள், மதர்போர்டு மற்றும் பிற மின்னணு உதிரிபாகங்களின் விலை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என சாம்சங் தெரிவித்துள்ளது.
கேலக்ஸி எஸ்26 சீரிஸில் உள்ள 256 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ. 87,999 ஆக இருந்த நிலையில், தற்போது சுமார் 17 சதவீதம் அதிகரித்து ரூ. 1,02,999 ஆக உயர்ந்துள்ளது.