நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், வயது வந்த அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் 5,000 டாலர் வழங்கப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் உடனான போர் காரணமாக அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
டிரம்ப்பின் இந்த வாக்குறுதியை ஈவுத்தொகை என்று அவர் அழைத்தாலும், சமூக ஊடகங்களில் சிலர் இதனை லஞ்சம் என்று விமர்சித்து வருகின்றனர்.