
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக அரசு கூடுதல் நீர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தமிழகத்திற்கு வர வேண்டிய 30 டி.எம்.சி. நீரை முழுமையாக வழங்க வேண்டும் என்றும், தற்போது திறக்கப்படும் 14,000 கன அடி நீர் போதுமானதல்ல என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் பல்வேறு மனுக்கள் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.