
இந்திய அணியின் டி20 போட்டிகளுக்கான தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடர்ந்து களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் எஸ்.பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
அடுத்த 10 டி20 போட்டிகளுக்கும் இதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், சஞ்சு சாம்சனுக்கு இந்த ஆண்டு இறுதி வரை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சன் ஏற்கனவே 2 சதங்களை விளாசியதுடன் இந்திய அணிக்கு உலகக் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.