
சென்னையில் ஜூலை 27 அன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து 13,370 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் நிலவும் சூழலில், நேற்று முன்தினம் (ஜூலை 25) சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.