
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மற்றும் மொகாலியில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 8-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியுள்ளது.
இந்திய அணியில் தில்பிரீத் சிங் இரண்டு கோல்களும், ஜுக்ராஜ் சிங், ஹர்மன் பிரீத் சிங், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜீத் சிங், சஞ்சய் மற்றும் அங்கத் பிர் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர்.
தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.