
ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13 வரை துபாயில் நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
பாத்திமா சனா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், இவர் ஆசிய கோப்பை மட்டுமின்றி ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அணியை வழிநடத்துவார்.
பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் செப்டம்பர் 1-ம் தேதி தாய்லாந்தையும், செப்டம்பர் 5-ம் தேதி இந்தியாவையும் எதிர்கொள்ள உள்ளது.