
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31-ம் தேதி திங்கட்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு, சமூக நலன் மற்றும் வேளாண்மைத் துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
அமைச்சர்கள் விக்னேஷ், ஜெகதீஷ்வரி மற்றும் வினோத் ஆகியோர் தங்கள் துறைகளின் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலுரை வழங்குவார்கள்.