
சென்னையில் விடியவிடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், வடபழனியில் அதிகபட்சமாக 13.5 செமீ மழை பதிவானது.
தண்ணீர் தேங்கல், மரங்கள் சரிவு மற்றும் தெருவிளக்குகள் பழுது தொடர்பாக ஒரே நாளில் 1212 புகார்கள் வந்ததாக மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்தார்.
பொதுமக்கள் மழை நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டார்.