
சட்டப்பேரவையில் தமிழ் மொழி விவாதத்தின் போது அமைச்சர் மரிய வில்சன் கிறிஸ்தவ மதத்தை இணைத்துப் பேசியது தவறான முன்னுதாரணம் என அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.
அமைச்சர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அந்தப் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் கோரினார்.