
கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி செப்டம்பர் 1 முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் முன்பு காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
திருச்சியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் முருகேசன் தலைமையில் 15 விவசாய அமைப்புகள் பங்கேற்று இந்த போராட்ட முடிவை ஒருமனதாக அறிவித்தன.
செப்டம்பர் 1 அன்று 50 விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும், 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தெரிவித்தார்.