
தானியங்கி பட்டா மாறுதல் முறையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் தலையீடு நீக்கப்பட்டதால், பத்திரப்பதிவு முடிந்த ஒரு வாரத்தில் பட்டா பெயர் மாற்றம் சாத்தியமாகியுள்ளது.
பதிவுத்துறை இணையதளத்தில் இருந்து வருவாய்துறையின் 'தமிழ் நிலம்' தளத்திற்கு தகவல்கள் நேரடியாக அனுப்பப்பட்டு, துணை தாசில்தார் ஒப்புதலுடன் பெயர் மாற்றம் உறுதி செய்யப்படுகிறது.
பட்டா பெயர் மாற்றம் முடிந்தவுடன் விண்ணப்பதாரர்களின் மொபைல் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும் நிலையில், பட்டா பிரதியை நேரடியாக அனுப்பும் வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.