
கோவை தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், 1 சிறார் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அமுதன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், முதற்கட்டமாக ரூ.6 லட்சம் நிவாரண நிதிக்கான ஆணையை வழங்கினர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் பட்டா வழங்குவதுடன், அமுதனின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்தார்.