சிறுநீர்ப்பை செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடுகளால் உண்டாகும் கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு, சாக்ரல் நியூரோமாடுலேஷன் எனும் நவீன சிகிச்சை முறை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சையில் மென்மையான மின் துடிப்புகள் மூலம் நரம்புகள் தூண்டப்பட்டு, மூளைக்கும் சிறுநீர்ப்பைக்கும் இடையிலான தகவல் தொடர்பு குறைபாடுகள் சீரமைக்கப்படுகின்றன.
சத்திர சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றினால், பக்க விளைவுகள் இன்றி முழுமையான நிவாரணம் பெற முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.