
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் 'சௌடெல்' புயலால் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
காவோபிங் நகரில் அதிகாலை 4 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் 12 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் அடுத்த 3-4 நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.