
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
தேசிய சராசரியைக் காட்டிலும் சென்னையில் அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
பணவீக்கம் மற்றும் சந்தைக் கட்டுப்பாடு போன்ற அடிப்படை மக்கள்நலக் கொள்கைகளில் முதல்வர் விஜய்க்குப் பொருளாதாரப் புரிதல் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.