
ஐ.ஐ.டி தார்வாட் முன்னாள் மாணவர் சாய் வெங்கட ஆதித்யா அரேபல்லி, அமெரிக்காவின் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) நிறுவனத்தில் மென்பொறியாளராக ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
2022-ல் பி.டெக் முடித்த இவர், பெங்களூரில் ரூ.13 லட்சம் சம்பளத்தில் பணியாற்றிய நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஆர்வம் கொண்டு அமெரிக்காவில் எம்.எஸ் பட்டம் பயின்றார்.
மேல்படிப்பின் போது கோடிங் மற்றும் தயாரிப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்திய ஆதித்யா, படிப்பை முடித்த கையோடு சீட்டிலில் உள்ள அமேசான் கிளையில் இந்த உயர் பதவியைப் பெற்றுள்ளார்.